தேனி

சிறுமியை காப்பாற்றிய கழக ஒருங்கிணைப்பாளர் -கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த பெற்றோர்

தேனி

தேனி மாவட்டம், போடி மீனாட்சிபுரத்தை சேர்ந்த 14 வயது சிறுமியின் இருதய அறுவை சிகிச்சைக்கு உதவி செய்து அவரை காப்பாற்றிய கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு சிறுமியின் பெற்றோர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

தேனி மாவட்டம், போடி மீனாட்சிபுரத்தில் வசித்து வருபவர் மணிகண்டன்-தீபா தம்பதியினர். இவர்கள் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு 14 வயதில் ஹாசினி என்ற பெண் குழந்தை உள்ளது. ஹாசினி 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு சிறு வயதிலிருந்தே தலை சுற்றல், உடல் சோர்வு பாதிப்பு அடிக்கடி ஏற்பட்டு வந்துள்ளது.

பல்வேறு சிகிச்சை எடுத்தும் பயனிளிக்காததால் மருத்துவ பரிசோதனை செய்துள்ளனர். இதில் ஹாசினிக்கு இருதயத்தில் ஓட்டை இருப்பதாகவும் அதனை அறுவை சிகிச்சை செய்து சரி செய்ய வேண்டும் என்றும் அதற்கு பல லட்சம் ரூபாய் செலவாகும் என்றும் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மருத்துவர்களின் தகவல் மணிகண்டன்-தீபா தம்பதியினரை நிலைகுலையசெய்துள்ளது. கூலி வேலை செய்து வந்த மணிகண்டன் பணத்தை ஏற்பாடு செய்ய முடியாமல் கண் கலங்கியுள்ளார்.

கழக நிர்வாகிகளிடமும் முறையிட்டுள்ளார். அதனை தொடர்ந்து நகர கழக நிர்வாகிகள் மணிகண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமியையும் கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்திடம் அழைத்து சென்று விபரத்தை தெரிவித்துள்ளனர்.

உடனே கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தாமதிக்காமல் கோயம்புத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தையை சிகிச்சைக்கு சேர்க்குமாறும் உடனடியாக அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்கிறேன் என்று கூறி அனுப்பி வைத்துள்ளார்.

அதன்படி சிகிச்சைக்கான அனைத்து செலவுகளையும் கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஏற்றுக்ெகாண்டார். இதையடுத்து அச்சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது அவர் பூரண உடல்நலத்துடன் உள்ளார்.

கடவுள் போல் வந்து தனது எங்கள் மகளின் உயிரை காப்பாற்றிய கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்துக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என்று மணிகண்டன்-தீபா தம்பதியினர் கண்ணீர்மல்க தெரிவித்தனர்.

மேலும் இந்த தம்பதியினர் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். சிறுமியின் நிலை கண்டு உதவிய கழக ஒருங்கிணைப்பாளருக்கு பொதுமக்கள் நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.