சென்னை

அம்மா பிறந்தநாளை முன்னிட்டு வில்லிவாக்கத்தில் நலத்திட்ட உதவிகள்- வடசென்னை வடக்கு மேற்கு மாவட்ட செயலாளர் டி.ஜி.வெங்கடேஷ்பாபு வழங்கினார்

சென்னை, மார்ச் 15-

புரட்சித்தலைவி அம்மாவின் 72-வது பிறந்தநாளை முன்னிட்டு பட்ஜெட் விளக்க கூட்டம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வடசென்னை வடக்கு (மேற்கு) மாவட்ட கழகம் வில்லிவாக்கம் பகுதி 94-வது கிழக்கு வட்ட கழகம் சார்பில் வில்லிவாக்கம் பகுதி எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் பாக்ஸர் கே.தங்கராஜ் தலைமையிலும், கொளத்தூர் கே.கணேசன், திருமங்கலம் கே.மோகன், ஜி.ஆர்.பி.கோகுல், வில்லிவாக்கம் ஆர்.மகேஷ், ஆகியோர் முன்னிலையிலும் வில்லிவாக்கம் சிட்கோ நகர் மெயின்ரோட்டில் நடைபெற்றது.

இதில் வடசென்னை வடக்கு மேற்கு மாவட்ட கழக செயலாளர் டி.ஜி.வெங்கடேஷ்பாபு கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இக்கூட்டத்தில் அண்ணா தொழிற்சங்க தலைவர் தாடி.மா.இராசு, தலைமை கழக பேச்சாளர் செங்கை கோவிந்தராஜன், தலைமை பேச்சாளர் சிட்கோ சீனு, ஆகியோர் பேசினர்.

கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் செங்கை கோவிந்தராஜ் பேசியதாவது:-

அம்மா இறக்கும் தருவாயில் கூட நம்மிடத்தில் ஆட்சியை ஒப்படைத்து விட்டு தான் சென்றார். அதன்பிறகு முதல்வரும் துணை முதல்வரும் இரு கண்களாக இருந்து கழகத்தையும், ஆட்சியையும் காப்பாற்றி வருகிறார்கள். அம்மா கூறியது போல இந்த ஆட்சியையும், கழகத்தையும் எந்த கொம்பனாலும் அசைத்துக்கூட பார்க்க முடியாது. தமிழகத்தில் 7 முறை ஆட்சி செய்த பெரிய கட்சி அ.தி.மு.க தான். தமிழகத்தில் எம்.ஜி.ஆர் 3 முறை ஆட்சி செய்தார்.

அம்மா 4 முறை முதலமைச்சராக இருந்து உள்ளார். இதுவே சாதனை தான் அ.தி.மு.க.வில் ஒருவர் உறுப்பினராக இருப்பதே அவருக்கு பெருமை தான். பதவி வரும் போகும். ஆனால் நான் அ.தி.மு.க.வை சேர்ந்தவன் என்பதை வெளியில் சொல்வதில் பெருமை. சுதந்திரம் அடைந்த 70 வருடத்தில் 30 வருடம் ஆண்ட ஆட்சி செய்த கட்சி வடநாட்டில் இருந்து வந்த ஒருவரை நம்பி திமுக சார்பில் அவருக்கு 300 கோடி ரூபாய் செலவு செய்வதை பார்த்து திமுகவினர் வெட்கப்படுகிறார்கள். தமிழ்நாட்டு மக்களுக்கு தி.மு.க.வையும் தெரியும் அ.தி.மு.க.வையும் தெரியும். மதத்தினரை பிரித்து ஓட்டு வாங்க நினைக்கும் திமுகவின் கனவு பலிக்காது.

இவ்வாறு அவர் பேசினார்.