கன்னியாகுமரி

தோவாளை- திடல் ஊராட்சிக்கு புதிய அலுவலக கட்டடங்கள் – என்.தளவாய் சுந்தரம் தகவல்

கன்னியாகுமரி

தோவாளை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தோவாளை மற்றும் திடல் ஊராட்சிக்கு, புதிய அலுவலக கட்டடங்கள் கட்டுவதற்கு தலா ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி என்.தளவாய் சுந்தரம் தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம் நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தோவாளை மற்றும் திடல் ஊராட்சி அலுவலகம் மிகவும் பழமை வாய்ந்த கட்டடமாக காணப்படுகிறது. மேலும், இக்கட்டடம் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. இக்கட்டடங்களை மாற்றி புதிய கட்டடம் கட்டித்தருமாறு இப்பகுதியில் உள்ள மக்கள் என்னிடம் கோரிக்கை வைத்தனர்.

இக்கோரிக்கையை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றேன். முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி முதற்கட்டமாக தோவாளை மற்றும் திடல் ஊராட்சிக்கு, புதிய அலுவலக கட்டடங்கள் கட்டுவதற்கு தலா ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து தோவாளை மற்றும் திடல் ஊராட்சிக்கு புதிய அலுவலக கட்டடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்த முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமிக்கும், நிதி ஒதுக்கீடு செய்வதற்கு பரிந்துரை செய்த தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி என்.தளவாய் சுந்தரத்திற்கும், தோவாளை மற்றும் திடல் ஊராட்சி பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.