தற்போதைய செய்திகள்

பெண்களின் முன்னேற்றமே தேசத்தின் முன்னேற்றம் – ஆலயம் நல்வாழ்வு அறக்கட்டளை தலைவர் ஆர்.சந்திரசேகர் பேச்சு

கோவை

கோவை மருதமலை ஸ்ரீவள்ளியம்மன் கோவில் திருமண மண்டபத்தில் ஆலயம் நல்வாழ்வு அறக்கட்டளை சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் ஆலயம் நல்வாழ்வு அறக்கட்டளை சார்பில் இலவச தையல் பயிற்சி முடித்த மகளிர்கள் 160 பேருக்கு இலவச தையல் இயந்திரம் மற்றும் சான்றிதழ்களை ஆலயம் நல்வாழ்வு அறக்கட்டளை தலைவரும், இளைஞர் அணி மாவட்ட செயலாளருமான ஆர்.சந்திரசேகர் வழங்கினார்.

பின்னர் அவர் பேசுகையில்:

பெண்களின் முன்னேற்றத்திற்காக புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் தமிழக முதல்வரும், துணை முதல்வரும் பல்வேறு திட்டங்களை தந்து வருகிறார்கள்.ஆலயம் நல்வாழ்வு அறக்கட்டளை சார்பில் தையல் பயிற்சி முடித்த பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் இன்று வழங்கியுள்ளோம். நீங்கள் வேலை தேடி வெளியே செல்லவேண்டாம். இங்கு பயிற்சி முடித்து தையல் இயந்திரம் பெற்ற ஒவ்வொருவரும் சொந்தமாக தொழில் செய்யமுடியும். சுயதொழில் கற்றுக்கொண்டால வாழ்க்கையில் வெற்றி பெறலாம். பெண்களின் முன்னேற்றத்திற்காக ஆலயம் நல்வாழ்வு அறக்கட்டளை தொடர்ந்து உழைத்துக்கொண்டிருக்கும். பெண்களின் முன்னேற்றமே தேசத்தின் முன்னேற்றம்.

இவ்வாறு ஆலயம் நல்வாழ்வு அறக்கட்டளை தலைவர் ஆர்.சந்திரசேகர் பேசினார்.

நிகழ்ச்சியில் மகளிர் திட்டம், திட்ட இயக்குனர் கே.செல்வராஜ், வள்ளியம்மன் அறக்கட்டளை தலைவர் அன்பு (எ) செந்தில்குமார், ஆலயம் பயிற்சி மைய யோகா நிபுணர் தனலட்சுமி, மாணவரணி மாவட்ட இணை செயலாளர் கருப்புசாமி, 16 வது வட்ட கழக செயலாளர் ஏ.எஸ்.பார்த்திபன், 19 வது வட்ட கழக பொறுபபாளர் ஆர்.மயில்சாமி, மற்றும் லட்சுமிகாந்தன், குணசுந்தரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.