பிரக்ஞானந்தாவின் சாதனை பயணம் மென்மேலும் தொடர வேண்டும்-கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

சென்னை
நார்வே செஸ் ஓபன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அவரது சாதனை பயணம் மென்மேலும் தொடர வேண்டும் என்று கூறி உள்ளார்.
இதுகுறித்து கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
நார்வே செஸ் தொடரில் வெற்றி வாகை சூடி, இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ள இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவிற்கு எனது பாராட்டுக்கள். அவரது சாதனைப்பயணம் மென்மேலும் தொடர எனது அன்பார்ந்ந நல்வாழ்த்துகள்.
இவ்வாறு கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்த தெரிவித்துள்ளார்.