தற்போதைய செய்திகள்

சித்த மருத்துவ கட்டிட அபிவிருத்தி பணிக்கு ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கீடு-முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ உறுதி

தூத்துக்குடி

கோவில்பட்டி வில்லிச்சேரி கிராம பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சித்த மருத்துவ கட்டிட அபிவிருத்திக்கு ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்வதாக முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ உறுதி அளித்துள்ளார்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வில்லிசேரி கிராமத்தில் உள்ள சித்த மருத்துவமனையில் ஒரு அறை மட்டுமே இருப்பதால் நோயாளிகளுக்கு வழங்க கூடிய மருந்துகள் வைப்பதற்கும் மற்றும் நோயாளிகள் அமர்ந்து இருப்பதற்கும் கூடுதல் மருத்துவ கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்ற வில்லிசேரி கிராம மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

அந்த கோரிக்கையை ஏற்று அக்கிராமத்தில் அமைந்துள்ள சித்த மருத்துவ கட்டிடத்தை அபிவிருத்தி செய்வதற்கான பணியை மேற்கொள்ள கோவில்பட்டி தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்து தருவதாக வில்லிசேரி கிராம சித்த மருத்துவமனை டாக்டர் ஜெயலட்சுமியிடம், முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி தொகுதி சட்டமன்ற உருப்பினருமான கடம்பூர் செ.ராஜூ உறுதியளித்தார். அதைத்தொடர்ந்து அவர் அதற்கான கடிதத்தை டாக்டர் ஜெயலட்சுமியிடம் வழங்கினார்.

இந்நிகழ்வின் போது எட்டையாபுரம் நகர செயலாளர் ச.ராஜகுமார், சித்தா டாக்டர் குமார், கோவில்பட்டி ஆவின் தலைவர் தாமோதரன், கடம்பூர் நகர செயலாளர் வாசு முத்து, கடம்பூர் அம்மா பேரவை செயலாளர் மோகன், கயத்தார் கிழக்கு ஒன்றிய எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் அய்யாத்துரை பாண்டியன், திருவேங்கடம் மகளிர் அணி நிர்மலாதேவி, முன்னாள் கவுன்சிலர் பாலமுருகன் மற்றும் பலர் உடனிருந்தனர்.