தற்போதைய செய்திகள்

குழந்தைகளுக்கு முறையான கல்வி கிடைக்க உறுதி ஏற்போம்-எதிர்க்கட்சி கொறாடா எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள்

சென்னை,

சர்வதேச குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு குழந்தைகளுக்கு முறையான கல்வி கிடைக்க உறுதி ஏற்போம் என்று எதிர்க்கட்சி கொறாடா எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சர்வதேச குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு எதிர்க்கட்சி கொறடாவும், முன்னாள் அமைச்சரும், கழக அமைப்பு செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளருமான எஸ்.பி.வேலுமணி தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

தேசத்தின் எதிர்காலமாகிய நம் குழந்தைகளுக்கு முறையான கல்வி மற்றும் அடிப்படை உரிமைகள் கிடைத்து அவர்கள் சமூகத்தில் மேலோங்கி வளர்ந்திட சர்வதேச குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தில் உறுதியேற்போம்.

இவ்வாறு எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.