குழந்தை தொழிலாளர்களே இல்லாத உலகை உருவாக்க உறுதியேற்போம்-எதிர்க்கட்சி தலைவர்

சென்னை
குழந்தை தொழிலாளர்களே இல்லாத உலகை உருவாக்க உறுதியேற்போம் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
குழந்தைகள் அனைவருக்கும் அடிப்படை உரிமையான கல்வி மற்றும் பாதுகாப்பை அவர்களுக்கு வழங்க வேண்டியது நம் கடமை, அதை அவர்களுக்கு மறுக்க நினைப்பது சமூக நீதிக்கு எதிரானது என்றுணர்ந்து, குழந்தை தொழிலாளர்களே இல்லாத உலகை உருவாக்க குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தில்’ உறுதியேற்போம்.
இவ்வாறு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.