தற்போதைய செய்திகள் மற்றவை

கழக ஒருங்கிணைப்பாளர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் வருகிற 17-ந்தேதி நடைபெற உள்ள ஸ்ரீவெங்கடாசலபதி கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க வருகை தரும் கழக ஒருங்கிணைப்பாளர்களை வரவேற்பது குறித்து ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர், மாவட்ட கழக செயலாளர் தலைமையில் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ஏசிஎஸ் நகரில் புதிய நீதி கட்சியின் நிறுவனர் ஏ.சி.சண்முகம் புதிதாக ஸ்ரீவெங்கடாஜலபதி கோயில் கட்டியுள்ளார். இக்கோயில் கும்பாபிஷேக விழா வருகிற 17-ந்தேதி நடைபெற உள்ளது.

இந்த விழாவில் பங்கேற்க கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர்.

இந்நிலையில் கழக ஒருங்கிணைப்பாளர்களை வரவேற்க சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்வது தொடர்பாக ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சரும், கழக அமைப்பு செயலாளருமான சேவூர் எஸ்.இராமச்சந்திரன் எம்.எல்.ஏ, திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளர் தூசி கே.மோகன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஆரணி நகரம், ஆரணி ஒன்றியம், மேற்கு ஆரணி ஒன்றியம், கண்ணமங்கலம் பேரூராட்சி கழக சார்பில் கழகத்தினர் பல்லாயயிரக்கணக்கில் திரண்டு ஒருங்கிணைப்பாளர்களுக்கு வரவேற்பு அளிக்க வேண்டும். திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் முழுவதிலிருந்தும் கழகத்தினர் பெருந்திரளாக பங்கேற்று வரவேற்பு அளிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.