தற்போதைய செய்திகள்

தி.மு.க.வின் அராஜக போக்கை தட்டி கேட்கும் வலிமையான இயக்கம் கழகம்-முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேட்டி

தூத்துக்குடி,

தி.மு.க.வின் அராஜக போக்கை தட்டி கேட்கக்கூடிய வலிமையான இயக்கம் கழகம் மட்டுமே என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கூறி உள்ளார்.

தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சரும், வடக்கு மாவட்ட செயலாளருமான கடம்பூர் செ.ராஜூ எம்.எல்.ஏ தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு பின்னர் முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளருமான கடம்பூர் செ.ராஜூ எம்.எல்.ஏ செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

சட்டமன்றத்தில் ஒன்றும். மக்கள் மன்றத்தில் ஒன்றுமாக மாற்றி மாற்றி பேசிவரும் திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் மக்களுக்கு எதிரான செயல்பாடுகள் மற்றும் அராஜக போக்குகளை கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்.

இதுபோன்ற தி.மு.க.வின் அராஜக போக்கை தட்டி கேட்கக்கூடிய வலிமையான இயக்கமாக புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரால் உருவாக்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தினால் மட்டுமே முடியும். சசிகலா, டிடிவி தினகரன் ஆகிய இருவருக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கும் எந்த வித சம்பந்தமும் கிடையாது.