தற்போதைய செய்திகள்

வேலூர் புறநகர் மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

வேலூர்

வேலூர் புறநகர் மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட கழக செயலாளரும், ஆவின் பெருந்தலைவருமான த.வேலழகன் தலைமையில் நடைபெற்றது.

கழக வளர்ச்சி பணிகளை மேற்கொள்வது தொடர்பாக வேலூர் புறநகர் மாவட்டம், பள்ளிகொண்டா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மாவட்ட கழக அலுவலகத்தில் மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு மாவட்ட கழக செயலாளரும், ஆவின் பெருந்தலைவருமான த.வேலழகன் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளரும், ஆவின் பெருந்தலைவருமான த.வேலழகன் ஆலோசனை வழங்கி பேசினார்.

இக்கூட்டத்தில் முன்னாள் மாவட்ட கழக செயலாளர் வி.ராமு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சிஎம்.சூரியகலா, ஜி.லோகநாதன், மாவட்ட கழக அவைத்தலைவர் ஏ.எஸ்.சேட்டு, மாவட்ட கழக நிர்வாகிகள் அமுதா சிவபிரகாசம், ஆர்.மூர்த்தி, சந்திரா சேட்டு, ஜி.பி‌.மூர்த்தி மற்றும் நிர்வாகிகள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.