தற்போதைய செய்திகள்

திருப்பத்தூர் மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்-முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தலைமையில் நடைபெற்றது

திருப்பத்தூர்,

வாணியம்பாடியில் உள்ள திருப்பத்தூர் மாவட்ட கழக அலுவலகத்தில் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.வீரமணி தலைமையில் நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகரில், தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மாவட்ட கழக அலுவலகத்தில்
மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.வீரமணி தலைமை தாங்கினார்.

இக்கூட்டத்தின் போது கழக வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.வீரமணி ஆலோசனை வழங்கி பேசினார்.

இக்கூட்டத்தில் வாணியம்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜி.செந்தில்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கோவி.சம்பத்குமார், கே.ஜி.ரமேஷ், மாவட்ட கழக நிர்வாகிகள் கோமா.புஷ்பநாதன், ஏ.ஆர்.ராஜேந்திரன், எம்.கே.ராஜா, லீலா சுப்பிரமணி, லலிதா குருவையன், தலைமை செயற்குழு உறுப்பினர் மஞ்சுளா கந்தன், ஒன்றிய கழக செயலாளர்கள் சி.செல்வம், திருப்பதி, சாம்ராஜ், சீனிவாசன், ஜெ.ஜோதி ராமலிங்கராஜா, ஆர்.வெங்கடேசன், நகர கழக செயலாளர்கள் டி.டி.குமார், எஸ்.பி.சீனிவாசன், எம்.மதியழகன், ஜி.சதாசிவம், பேரூராட்சி கழக செயலாளர்கள ஆர்.சரவணன் சிவகுமார், மகேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் கே.ஜி.சுப்பிரமணி, பூங்குளம் மகேந்திரன், எம்.சரவணன் கலா சவுந்தராஜன் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.