தற்போதைய செய்திகள்

விடியா தி.மு.க. அரசுக்கு கண்டனம்-ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட கழகம் தீர்மானம்

ஈரோடு,

அவிநாசி-அத்திக்கடவு கூட்டுக்குடிநீர் திட்டத்தை விரைந்து முடிக்காமல் தாமதப்படுத்தும் விடியா தி.மு.க. அரசுக்கு கண்டனம் தெரிவித்து முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் தலைமையில் நடைபெற்ற ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட கழக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கவுந்தப்பாடியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.கருப்பணன் எம்.எல்.ஏ தலைமை தாங்கினார். கழக அம்மா பேரவை இணைச் செயலாளர் எஸ்..ஜெயக்குமார் எம்.எல்.ஏ முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத விடியா தி.மு.க அரசை வன்மையாக கண்டிப்பது, விவசாயிகளின் கனவு திட்டமான அவினாசி-அத்திக்கடவு திட்டம் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியால் துவக்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தை விடியா தி.மு.க அரசு விரைந்து முடிக்காமல் காலதாமதப்படுத்தி வருவது கண்டிக்கத்தக்கது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் கே.சி.பொன்னுதுரை, இணை செயலாளர் மைனாவதி கந்தசாமி, துணை செயலாளர்கள் எம்.எஸ்.வாசு, கவிதா, பொருளாளர் கே.பி.எஸ்.மணி, கழக தலைமை செயற்குழு உறுப்பினர் என்.உமா, ஒன்றிய செயலாளர்கள் அருள்ஜோதி கே.செல்வராஜ், ரஞ்சித் ராஜ், ஜெகதீசன், விஜயன், சி.டி.ரவிச்சந்திரன், சக்திவேல், தனசேகர், சி.பி.ராமசாமி, முனியப்பன், மேகநாதன், கழக பொதுக்குழு உறுப்பினர்கள் தட்சிணாமூர்த்தி, கண்ணம்மாள் ராமசாமி, பேரூராட்சி செயலாளர்கள் கே.எம்.பழனிசாமி, கல்யாணசுந்தரம், கே.எம்.ரமேஷ்குமார், வி.கே.சின்னசாமி,எஸ் ஏ பாவணன், எஸ்.என்.எஸ்.கவிவர்மன், கமல கண்ணன்பூபாலகிருஷ்ணன், சரண் பிரபு, மாரியப்பன், கிருஷ்ணன், சரவணன், துரைசாமி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.