தற்போதைய செய்திகள்

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக ஆலோசனை கூட்டம்-முன்னாள் அமைச்சர்கள் என்.ஆர்.சிவபதி, மு.பரஞ்ஜோதி, எஸ்.வளர்மதி பங்கேற்பு

திருச்சி,

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் என்.ஆர்.சிவபதி, மு.பரஞ்ஜோதி, எஸ்.வளர்மதி ஆகியோர் பங்கேற்று ஆலோசனை வழங்கி பேசினர்.

திருச்சி தில்லைநகரிலுள்ள திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் கழக வளர்ச்சி பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக்கூட்டத்திற்கு திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி தலைமை வகித்தார்.

மாநில எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான என்.ஆர்.சிவபதி, கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.வளர்மதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.