தற்போதைய செய்திகள்

புதுச்சேரி கிழக்கு மாநில கழக ஆலோசனை கூட்டம்-செயலாளர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது

புதுச்சேரி,

புதுச்சேரி கிழக்கு மாநில கழக நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், நகர கழகம் மற்றும் தொகுதி கழக செயலாளர்களின் ஆலோசனைக்கூட்டம் உப்பளம் தலைமை கழகத்தில் மாநில கழக செயலாளர் அன்பழகன் தலைமையில், காரைக்கால் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ ஓமலிங்கம், புதுச்சேரி கிழக்கு மாநில அவைத்தலைவர் அன்பானந்தம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கழகத்தின் வளர்ச்சி பணிகள் குறித்து நிறைவேற்றப்பட்டன. இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் மாநில செயலாளர் நடராசன், புதுச்சேரி கிழக்கு மாநில இணை செயலாளர் வீரம்மாள், மாநில துணை செயலாளர்கள் உமா என்ற கோவிந்தம்மாள், வையாபுரி மணிகண்டன், மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன், மாநில அம்மா பேரவை செயலாளர் பாஸ்கர், முன்னாள் எம்.எல்.ஏ ராஜாராமன், மாநில இணை செயலாளர்கள் கணேசன், திருநாவுக்கரசு, நகர கழக செயலாளர்கள் அன்பழக உடையார், சித்தானந்தம், செயற்குழு உறுப்பினர் விஜயலட்சுமி, மாநில கழக துணைச் செயலாளர்கள் எம்ஏகே.கருணாநிதி, கிருஷ்ணமூர்த்தி, கணேசன், வி.கே. மூர்த்தி, காந்தி,குமுதன், சேரன், மாநில எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் பாண்டுரங்கன்,

மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி, மாநில எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் மருதமலையப்பன், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ராமலிங்கம், மீனவரணி செயலாளர் ஞானவேல், மாநில அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி செயலாளர் செல்வம், மாணவரணி செயலாளர் பிரதீப், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் தினேஷ்குமார். தொகுதி கழக செயலாளர்கள் துரை, சிவகுமார், ஆறுமுகம், கருணாநிதி, பாஸ்கர், பழனிசாமி, ராஜா, கிருஷ்ணன், சண்முகதாஸ், சம்பத்,நடேசன், குணசேகர், நகர கழக தலைவர்கள் செல்வகுமார், டாக்டர் கணேஷ், பொதுக்குழு உறுப்பினர்கள் முனியம்மாள், கமலா, சூர்யா, ரவிகுமார், ரேணுகாதேவி, வெங்கடேசன், செந்தில்முருகன், பாலன், சிவராமராஜா, ராஜராஜன், நாகமுத்து உட்பட நகர கழக நிர்வாகிகள், தொகுதி கழக நிர்வாகிகள், வார்டு கழக நிர்வாகிகள் உள்பட திரளாக கலந்து கொண்டனர்.