சிவகங்கை

கீழடியில் 6-ம் கட்ட அகழாய்வு: 2 அமைச்சர்கள் நேரில் ஆய்வு

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் 4 இடங்களில் 6-ம் கட் ட அகழாய்வு பணிகளை தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன், கதர் மற்றும் கிராம தொழில் வரியதுறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் அமைச்சர் க.பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கடந்த 5 முறை நடைபெற்ற அகழ்வாராய்ச்சி பணியில் கீழடி பகுதி ஒரு தொழில் நகரம் மிக்க பகுதிக்கான கண்டுபிடிக்கப் பட்டது. தற்போது 6-ம் காட் ட ஆராய்ச்சியில் பணியில் 7 விதமான அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இடங்களை தேர்வு செய்து உள்ளோம்.

கீழடியில் மத்திய தொல்லியல் துறையில் கண்டெடுக்கப்பட்ட 8 ஆயிரம் அரும் பொருட்களை காட்சிப்படுத்த கேட்டு உள்ளோம். இன்னும் ஒரு ஆண்டில் கீழடி அருங்காட்சியம் அமைக்கப்பட்டு அங்கு 15 ஆயிரம் அரும் பொருட்களை பொதுமக்கள்  பார்வைக்கு வைக்க இருக்கிறோம்.

ஜனவரியில் சென்னை நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் கீழடி ஆராய்ச்சி அரங்கம் அமைக்கப்பட்டதை
சுமார் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர்.தமிழ்நாடு தொழில்துறை சார்பில் மேற்கொண்ட 4 மற்றும் 5 கட்ட அகழாய்வு பணிகளை 24 மொழிகளில் நூலாக வெளியிடப்பட்டுள்ளது. குறுகிய காலங்களில் சுமார் 55 ஆயிரம் பிரதிகள் விற்பனை ஆகி இருப்பது ஒரு சிறப்பாகும்.

தமிழகத்தில் கீழடி உட்பட 7 இடங்களில் அகழாய்வு பணிகள் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.பாண்டிய நாட்டின் தலைநகரமாக மணலூர் இருந்திருக்கலாம் என வரலாற்று அறிஞர்களின் கருத்தாக இருக்கிறது. அதற்கான ஆதாரங்கள் கிடைக்கும்போது அவை உறுதி செய்யப்படும்.

இவ்வாறு அமைச்சர் க.பாண்டியராஜன் கூறினார்.

இந்த ஆய்வின்போது மானாமதுரை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாகராஜன், மாவட்ட வருவாய் அதிகாரி லதா, கீழடி ஆராய்ச்சி அதிகாரி ஆசைத்தம்பி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.