தற்போதைய செய்திகள்

கொரோனா வைரஸ் நோயை தடுக்க பொதுமக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் – அமைச்சர் உதயகுமாரிடம் மாணவர்கள் உறுதி

மதுரை

கொரோணா வைரஸ் நோயை தடுக்க முதலமைச்சரின் அறிவுரைகளை மக்களிடத்தில் விழிப்புணர்வு பிரசாரம் செய்வோம்அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம் மாணவர்கள் உறுதிபட கூறினர்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் உள்ள காமராஜர் உறுப்பு கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

எந்த ஒரு கருத்தையும் மக்களிடத்தில் எடுத்துச் செல்ல வேண்டுமானால். மாணவர்கள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தால் அது 00 சகவீதம் சென்றடையும். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க முதலமைச்சர் இதற்காக ரூபாய் 60 கோடியை ஒதுக்கி உள்ளார் மேலும் சுகாதாரத்துறை, வருவாய் துறை, உள்ளாட்சித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் மூலம் இதை கண்காணிக்க உத்தரவிட்டுள்ளார்.

அது மட்டுமல்லாது இந்த நோய் பரவாமல் தடுக்க பல்வேறு அறிவுரைகளை தமிழக மக்களுக்கு வழங்கியுள்ளார் அதனையெல்லாம் மாணவர்களாகிய நீங்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் மூலம் எடுத்துரைக்க வேண்டும். மேலும் கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும், கைகளைக் கழுவாமல் முகத்தை தொடக்கூடாது, உடல் நிலையில் தொடர்ந்து இருமல், காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

அதன்பின் அமைச்சரிடம் மாணவர்கள் கூறியதாவது:-

மக்களைக் காக்கும் இந்த புனிதப் பணியில் நாங்களும் நிச்சயம் ஈடுபடுவோம் எங்களது உறவினர்கள் சக மாணவர்கள் ஆகியோர் இடத்தில் முதலமைச்சரின் அறிவுரைகளை எடுத்துச் சொல்லுவோம் கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளுவோம் மற்றவர்களுக்கும் இது போன்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ள போவோம் தமிழகத்தில் இந்த நோயால் யாருக்கும் பாதிப்பில்லை என்ற சூழ்நிலை உருவாக்குவோம் முதலமைச்சரின் அறிவுரைகளை தினந்தோறும் எடுத்துச் சொல்வோம் என்று உறுதிபடக் கூறினர்.