ரூ.40 லட்சம் மதிப்பில் வளர்ச்சி பணிகள் -முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் தொடங்கி வைத்தார்

ஈரோடு,
ஈரோடு மாவட்டம் பவானி தொகுதி சலங்கபாளையம் பேரூராட்சியில் ரூ.40 லட்சம் மதிப்பில் வளர்ச்சிப்பணிகளை
முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.
ஈரோடு மாவட்டம் பவானி தொகுதி சலங்கபாளையம் பேரூராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 6-வது வார்டு சத்தி பவானி மெயின் ரோடு கான்கிரீட் மற்றும் வடிகால் அமைத்தல், செந்தாம்பாளையம் காலனியில் வடிகால் அமைத்து கல்வெட்டு அமைத்தல், வார்டு எண் 12ல் மேட்டூர் ரோடு வாய்க்கால்புதூரில் குடிநீர் குழாய் அமைத்து குடிநீர் வசதி செய்யும் பணி, வார்டு எண் 15ல் முனியப்பன் கோவில் அருகே சிறு பாலம் அமைத்தல் உள்ளிட்ட ரூ 40 லட்சம் மதிப்பில் வளர்ச்சிப் பணிகளை ஈரோடு புறநகர் மாவட்டக் கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.கருப்பணன் எம்.எல்.ஏ. பூமி பூஜையிட்டு தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பவானி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் ஜெகதீசன், சலங்கபாளையம் பேரூராட்சி கழக செயலாளர் எஸ்.ஏ. பாவணன், ராமலிங்கம், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் நல்லி விவேகானந்தன், எம்.எம்.சோமு, ஈஞ்சரம் சேகர்,கூட்டுறவு சங்க தலைவர்கள் மாதேஸ்வரன், சோமசுந்தரம், உள்பட பலர் கலந்து கொண்டனர்.