தற்போதைய செய்திகள் மற்றவை

ரூ.27 லட்சம் மதிப்பில் வளர்ச்சி பணிகள் -முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் தொடங்கி வைத்தார்

ஈரோடு

ஈரோடு மாவட்டம் பவானி தொகுதிக்குட்பட்ட அம்மாபேட்டை ஒன்றியத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.27 லட்சம் மதிப்பில் வளர்ச்சி பணிகளை முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கண்ணப்பள்ளி ஊராட்சியில் பனங்காட்டுசேரி காலனி, மேல் காலனி, கீழ் காலனி ரூ.11.40 லட்சம் மதிப்பில் வடிகால் அமைக்கும் பணிகள், குருவரெட்டியூர் ஊராட்சியில் எம்.ஜி.ஆர் நகர், ஆலமரத்து காலனி, ஓரியாகனவனூர் காலனி, ஆகிய பகுதிகளில் ரூ 16 லட்சம் மதிப்பில் என மொத்தம் ரூ.27.40 லட்சம் மதிப்பில் வடிகால் மற்றும் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.கருப்பணன் எம்.எல்.ஏ பங்கேற்று பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அம்மாபேட்டை வடக்கு ஒன்றிய கழக செயலாளர் பி.ஜி.முனியப்பன், தெற்கு ஒன்றிய செயலாளர் மேகநாதன், மாவட்ட பொறுப்பாளர்கள் சின்னத்தம்பி, கோவிந்தராஜ், ஒன்றிய பொறுப்பாளர்கள் மாதேஸ்வரன், ரவி, முருகன், சேகர், வார்டு செயலாளர் சத்யா, விஜயராகவன், கணேசன், முத்து உட்பட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.