ராமநாதபுரம்

எடப்பாடியார் பொது செயலாளர் ஆக வேண்டும் -திருப்புல்லாணி ஒன்றிய கழக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

ராமநாதபுரம்

தொண்டர்களின் நம்பிக்கைக்குரிய தலைவராக உள்ள எடப்பாடியார் கழகத்தின் பொதுச்செயலாளராக பதவி ஏற்க வேண்டும் என்று ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஒன்றிய கழகம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஒன்றிய கழகம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது கழக பொதுச்செயலாளராக எடப்பாடியார் பதவி ஏற்க வேண்டும் என்று ஒன்றிய கழக செயலாளர் கருப்பையா, மாவட்ட விவசாயி அணி செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

தமிழகம் முழுவதும் தொண்டர்கள் அனைவரும், எடப்பாடியாருக்கு ஆதரவாக உள்ளனர். அதனால் திருப்புல்லாணி ஒன்றிய கழகமும் எடப்பாடியாருக்கு முழு ஆதரவினை தெரிவிக்கிறது. பொதுக்குழுவில் எடப்பாடியாருக்கு உற்சாக வரவேற்பு அளித்ததை பார்க்கும் போது பொதுச்செயலாளர் எடப்பாடியார் தான் என்பது தீர்க்கமாக தெரிகிறது.

கழகத்தின் நம்பிக்கையான தலைமையாக எடப்பாடியாரால் இருக்க முடியும். இந்த வலிமையான இயக்கத்திற்கு வலிமையான தலைவர் தான் வர வேண்டும். அது எடப்பாடியார் தான் இருக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டத்தின் போது மாவட்ட சிறுபான்மை பிரிவு இணை செயலாளர் சிராஜீதீன், ஒன்றிய விவசாய அணி செயலாளர் பாஸ்கர சேது, மாவட்ட இலக்கிய அணி துணை செயலாளர் செல்வக்குமார், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் குமரவேல், மாவட்ட பிரதிநிதிகள் பாண்டியன், சேதுராமன், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் ஒன்றிய செயலாளர் சஞ்சை காந்தி, மாவட்ட விவசாய அணி துணை செயலாளர் சொக்கன், ஒன்றிய மாணவரணி செயலாளர் முருகன், ஒன்றிய மீனவரணி செயலாளர் நாகசாமி, ஒன்றிய எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் இளங்கோ, மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் குமார் மற்றும் சண்முகம் உட்பட பலர் பங்கேற்றனர்.