சிறப்பு செய்திகள்

கழக பொதுக்குழு கூட்டம் வரும் 11-ந்தேதி திட்டமிட்டபடி எழுச்சியாக நடைபெறும்

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உறுதி

சென்னை,

ஓ.பன்னீர்செல்வத்தின் பின்புலத்தில் தி.மு.க. இருக்கிறது. திட்டமிட்டபடி கழகத்தின் பொதுக்குழு கூட்டம் வருகின்ற 11-ந்தேதி எழுச்சியாக நடைபெறும் என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உறுதியாக கூறி உள்ளார்.

முன்னாள் அமைச்சரும், கழக வழிகாட்டுதல் குழு உறுப்பினரும், விழுப்புரம் மாவட்ட கழக செயலாளருமான சி.வி.சண்முகம் நேற்று சென்னை கிரின்வேஸ் சாலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்வியும், அதற்கு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அளித்த பதிலும் வருமாறு.

கேள்வி: ஓ.பன்னீர்செல்வத்தின் பின்புலமாக தி.மு.க இருக்கின்றது என்று நினைக்கிறீர்களா.

பதில்: பொதுமக்களில் இருந்து எல்லோரும் இந்த குற்றச்சாட்டை வைக்கிறார்கள். நீங்களும் பார்த்திருக்கிறீர்கள். நாங்களும் பார்த்திருக்கிறோம். கைப் புண்ணுக்கு கண்ணாடி எதற்கு?

கேள்வி: நீதிமன்றத்தில் உங்கள் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்துள்ளீர்கள்.

பதில்: வழக்கறிஞர்கள் மூலமாக அளிக்கப்பட்டிருப்பதை முறையாக அளித்திருப்பதை வெளிப்படையாக சொல்ல முடியாது.

கேள்வி: 11-ம்தேதி திட்டமிட்டபடி மீண்டும் பொதுக்குழு நடக்குமா?

பதில்: 11-ம்தேதி கழகத்தின் பொதுக்குழு திட்டமிட்டபடி சிறப்பாக, எழுச்சியாக நடைபெறும்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.