பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் ரூ.1.16 கோடி மதிப்பில் திட்டப்பணி-ஆ.கோவிந்தசாமி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

தருமபுரி
பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் ரூ.1.16 கோடி மதிப்பில் திட்டப்பணிகளை சட்டமன்ற உறுப்பினர் ஆ.கோவிந்தசாமி பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கடத்தூர், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய ஒன்றியங்களில் உள்ள சிந்தல்பாடி ஊராட்சிக்குட்பட்ட சிந்தல்பாடியில் ரூ.11 லட்சம் மதிப்பில் பல்நோக்கு மையம் கட்டிடம், தொங்கனூரில் தொங்கனூர் காளியம்மன் கோவில் முதல் சிவப்பிரகாசம் வீடு வரை ரூ.11.30 லட்சம் மதிப்பில் புதிய தார்சாலை அமைத்தல்,
பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் புதுப்பட்டியில் ரூ.4 லட்சம் மதிப்பில் சுடுகாட்டிற்கு காத்திருப்போர் கூடம் அமைத்தல்,
பாப்பம்பாடியில் ரூ.6.50 லட்சம் மதிப்பில் புதிதாக மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்தல்,கவுண்டம்பட்டி ஆதி திராவிட காலனியில் ரூ.9.60 லட்சம் மதிப்பில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்தல், இருளப்பட்டி ஊராட்சியில் நாகலூர் முதல் சின்னசாகல் ரோடு வரை ரூ.39 லட்சம் மதிப்பில் சாலை பலப்படுத்துதல் பணி,
பி பள்ளிப்பட்டி ஊராட்சியில் ரூ.31 லட்சம் ரூபாய் மதிப்பில் எம்ஜி ரோடு முதல் ஜங்காளப்பட்டி வரை ரோடு வரை சாலை பலப்படுத்துதல் என ரூபாய் ஒரு கோடியே 16 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான புதிய திட்ட பணிகளை பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினர் ஆ.கோவிந்தசாமி பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்
இந்த நிகழ்வில் மாவட்ட கழக பொருளாளர் நல்லதம்பி, மாவட்ட கழக துணை செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் தலைவர் யசோதா மதிவாணன், ஒன்றிய செயலாளர்கள் மதிவாணன், சேகர், விஸ்வநாதன், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் பெரியக்கண்ணு, தமிழ்மணி, இளமாறன், கடத்தூர் ஒன்றியக்குழு தலைவர் உதயா மோகனசுந்தரம், பாப்பிரெட்டிப்பட்டி நகர கழக செயலாளர் தென்னரசு, ஊராட்சி குழு உறுப்பினர் சதாசிவம், ஊராட்சி மன்ற தலைவர்கள் குமார், வெங்கடேசன்,ரோஜாமணி, சிவக்குமார், நிர்வாகிகள் வேடியப்பன், மனோகரன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.