தற்போதைய செய்திகள்

மணலியில் புதிய இணைப்பு மேம்பாலம்: மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு

சென்னை

மணலியில் புதிய இணைப்பு மேம்பாலம் அமைப்பதற்கான இடத்தை மாநகராட்சி ஆணையர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சென்னை கொருக்குப்பேட்டை மணலி விரைவு சாலை எழில் நகர் ரயில்வே கிராசிங் மற்றும் தண்டையார்பேட்டை (பவர் ஆபீஸ்) நேரு நகர் ரயில்வே கிராசிங் பகுதிகளை இணைத்து புதிய மேம்பாலம் அமைக்கும் பணிகளுக்கான ஆய்வு கூட்டம் குப்பைமேடு பகுதி மண்டல அலுவலகத்தில் நேற்று சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ், மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இருவரும் கட்டுமான பணிகள் மேற் கொள்ளப்படும் பகுதிகளை பார்வையிட்டனர்.

இந்த ஆய்வின்போது கூடுதல் இணை ஆணையர்கள் ஜெயகவுரி, வருண், தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தின் தலைவரும், மாவட்ட கழக செயலாளருமான ஆர்.எஸ். ராஜேஷ், துணை ஆணையர் சுப்புலட்சுமி, மற்றும் மண்டல அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இருந்தனர்.