தற்போதைய செய்திகள்

எடப்பாடியார் பொதுச்செயலாளராக பொறுப்பேற்பது காலத்தின் கட்டாயம்

திருச்சி மாநகர் மாவட்ட அவைத்தலைவர் மலைக்கோட்டை வி.அய்யப்பன் திட்டவட்டம்

திருச்சி

வருகிற 11-ந்தேதி நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றைத்தலைமையாக எடப்பாடியாரை தேர்ந்தெடுப்போம். எடப்பாடியார் கழகத்தின் பொதுச்செயலாளராவது காலத்தின் கட்டாயம் என்று திருச்சி மாநகர் மாவட்ட கழக அவைத்தலைவர் மலைக்கோட்டை வி.அய்யப்பன் திட்டவட்டமாக கூறி உள்ளார்.

திருச்சி ஒத்தக்கடை கண்டோன்மென்ட் அருகிலுள்ள மாநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் மாவட்ட மாணவரணி செயலாளரும் , திருச்சி ஆவின் சேர்மனுமான பொறியாளர் சி.கார்த்திகேயன் ஏற்பாட்டில் , உறையூர் பகுதி கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் பகுதி கழக செயலாளர் என்.எஸ்.பூபதி(எ)பூபேந்திரன் முன்னிலையில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு தலைமை வகித்து பேசிய மாவட்ட கழக அவைத்தலைவரும், முன்னாள் மாநராட்சி கவுன்சிலருமான மலைக்கோட்டை வி.அய்யப்பன் பேசுகையில், முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடியார் கழக பொதுச்செயலாளராவது காலத்தின் கட்டாயம் என குறிப்பிட்டார்.

இக்கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடியார் பொதுச்செயலாளராக தலைமை பொறுப்பேற்று கழகத்தை வழிநடத்த வேண்டும்.

வருகிற 11-ம்தேதி நடைபெறும் பொதுக்குழுவில் எடப்பாடியாரை ஒற்றைத்தலைமையாக தேர்ந்தெடுப்போம். கழகத்தை காட்டிக்கொடுப்பவர்களுக்கு துணை போகும் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசை வன்மையாக கண்டிக்கிறோம்.

கழக நிர்வாகிகளை மிரட்டி பணிய வைக்க நினைக்கும் தி.மு.க அரசை வன்மையாக கண்டிக்கிறோம் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான டி.ரத்தினவேல், முன்னாள் அமைச்சர் என்.நல்லுசாமி, முன்னாள் மாவட்ட கழக செயலாளர் கே.சி.பரமசிவம், மாவட்ட கழக துணை செயலாளர் வழக்கறிஞர் ஆர்.வனிதா , கழக பொதுக்குழு உறுப்பினர்கள் வெல்லமண்டி யு.பெருமாள், எஸ்.மல்லிகாசெல்வராஜ்,

மாவட்ட மீனவ அணி செயலாளர் தென்னூர் கே.அப்பாஸ், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் கருமண்டபம் பி.நடராஜன், மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் ஜெ.இலியாஸ், மாவட்ட பீடி பிரிவு செயலாளர் இ.சகாப்தீன், பகுதி கழக செயலாளர்கள் ஏர்போர்ட் விஜி, டி.சுரேஷ்குப்தா, நாகநாதர் ஏ.பாண்டி, எம்.ஆர்.ஆர்.முஸ்தபா, திருச்சி மாநகராட்சி கவுன்சிலர் சி.அரவிந்தன்,

வட்ட கழக செயலாளர்கள் வினோத்குமார், கார்த்திக், சுப்புரா, முத்தையா, பன்னீர்செல்வம், பிச்சைமணி, பேக்கரி முருகன், ராஜா, ரவி, உறையூர் பகுதி தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கே.தர்மு, பிரேம்குமார்,

மாவட்ட மகளிர் அணி துணைச்செயலாளர் பி.சி.இந்திரா, தில்லைநகர் பகுதி கழக இணை செயலாளர் கீதாராமநாதன், மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை அவைத்தலைவர் ஜான் எட்வர்டு, 52-வது வார்டு கழக பிரதிநிதி திருநாவுக்கரசு, உறையூர் பகுதி கழக நிர்வாகிகள் சந்திரசேகர், ராஜாளி சேகர், ஜெயந்திசிவா, லெஸ்லி, ஜமீலா உள்ளிட்ட கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.