தற்போதைய செய்திகள்

எடப்பாடியாரின் கீழ் ராணுவ கட்டுப்பாடுடன் செயல்பட காத்து கொண்டிருக்கிறோம்

திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் சிறுணியம் பி.பலராமன் பேட்டி

திருவள்ளூர்

கழகத்தை காத்து நிற்பவரை பொது செயலாளராக தேர்ந்தெடுப்போம். தீயசக்தி தி.மு.க என்னும் எதிரிக்கு அஞ்சாத எடப்பாடியாரின் கீழ் ராணுவ கட்டுப்பாடுடன் செயல்பட காத்திருக்கிறோம் என்று திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும், பொன்னேரி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பி.பலராமன் கூறி உள்ளார்.

திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் மாவட்ட கழக செயலாளரும், பொன்னேரி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சிறுனியம் பி.பலராமன் தலைமையில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கழக நிர்வாகிகள் அனைவரும் ஒற்றை தலைமையான எடப்பாடியார் தலைமையில் செயல்பட வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றினார்.

இதன்பின்னர் திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும், பொன்னேரி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பி.பலராமன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழகத்தில் அடங்கிய பொன்னேரி, கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியை சேர்ந்த மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமைக்கழக நிர்வாகிகள், ஒன்றியக்குழு தலைவர்கள், ஒன்றியக்குழு துணைத்தலைவர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய கழக செயலாளர்கள், நகர கழக செயலாளர், பேரூர் கழக செயலாளர்கள்,

மாவட்ட சார்பு அணி செயலாளர்கள், ஒன்றிய நகர, பேரூர் கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் கழகத்தை சார்ந்த உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கூட்டுறவு சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் மாவட்டத்தில் அடங்கிய 20 கழக செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள், கிளை கழக செயலாளர்கள், புரட்சித்தலைவர் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆரின் கழக உடன்பிறப்புகள், தாய்மார்களின் எகோபித்த விருப்பம் கழகத்திற்கு ஒற்றைத்தலைமை என்ற முழக்கம்.

அதற்கு ஏற்ப முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி ஒற்றை தலைமைக்கு வர வேண்டும் என்பது அனைவரது விருப்பமாக உள்ளது.

எதிரிக்கு அஞ்சாமல் மேற்கொண்டு எதிர்வினை ஆற்றும் செயலும், கடந்த நான்கரை ஆண்டுகளாக தமிழகத்தை சிறப்பாக நல்லாட்சி செய்து தமிழக மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவரும், கழக தலைமை நிலைய செயலாளராக கழகத்தை காத்து நிற்கும் எடப்பாடி கே.பழனிசாமியை ஒற்றை தலைமையின் கீழ் கழக பொது செயலாளராக தேர்ந்தெடுப்போம்.

கழகத்தின் உயிர் மூச்சாக இருக்கக்கூடிய ஒன்றரை கோடி தொண்டர்களை எடப்பாடியார் காத்திட வேண்டும் என்று திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழகம் சார்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. புரட்சித்தலைவி அம்மா வழியின் படி எவ்வாறு ராணுவ கட்டுப்பாடுடன் செயல்பட்டோமோ, அதேபோன்று எடப்பாடியாரின் தலைமையில் ராணுவ கட்டுப்பாடுடன் செயல்பட காத்துக்கொண்டிருக்கிறோம்.

இவ்வாறு திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும், பொன்னேரி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பி.பலராமன் தெரிவித்தார். பேட்டியின் போது ஒன்றிய கழக நிர்வாகிகள், நகர கழக நிர்வாகிகள், பேரூர் கழக நிர்வாகிகள், கிளை கழக சார்பு அணி நிர்வாகிகள் உடனிருந்தனர்.