தற்போதைய செய்திகள்

எடப்பாடியார் பொதுச்செயலாளராக வேண்டி சிறப்பு பூஜை-வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலில் தங்கத்தேர் இழுத்து கழகத்தினர் வழிபாடு

வேலூர்

எடப்பாடியார் கழக பொதுச்செயலாளராக வேண்டி வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜை செய்து தங்கத்தேர் இழுத்து கழகத்தினர் வழிபட்டனர்.

முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி கழகத்தின் பொதுச்செயலாளராக பதவி ஏற்க வேண்டி, வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலில் வேலூர் மாநகராட்சி கழக மாமன்ற உறுப்பினர் குழு தலைவர் எஸ்.எழிலரசன் ஏற்பாட்டில், வேலூர் மாநகர் மாவட்ட கழக செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு தலைமையில், கழகத்தினர் சிறப்புபூஜை செய்து தங்கத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

இந்நிகழ்வில் மாவட்ட கழக இணை செயலாளர் சுகன்யாதாஸ், மாவட்ட கழக துணை செயலாளர் கே.ஜெயபிரகாஷ், பகுதி கழக செயலாளர்கள் எபிஎல்.சுந்தரம், எஸ்.குப்புசாமி, ஜெய்சங்கர், ஜனார்த்தனன், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் எஸ்.பி.ராகேஷ், மாவட்ட அம்மா பேரவை செயலாளர்அமர்நாத், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் எம்.ஏ.ராஜா, மாவட்ட கலை பிரிவு செயலாளர் டி.டி.ஆர்.ரகு, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் அண்ணாமலை,

மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பாலச்சந்தர், சூளை மணி, ஆனந்தன், வேலூர் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் ராஜசேகர், சி.கே.சிவாஜி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு பொருளாளர் திருமால், பன்னீர், சிகேஜி. விஜயகுமார், மாமன்ற உறுப்பினர் சரவணன், ராஜி, உமாநாத், ரவின்குமார், சம்பத் மற்றும் நிர்வாகிகள் பலர் உள்ளனர்.