தற்போதைய செய்திகள்

மடத்துக்குளம் தொகுதியில் ரூ.30 லட்சம் மதிப்பில் வளர்ச்சிப்பணிகள்-சி.மகேந்திரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

திருப்பூர்

மடத்துக்குளம் தொகுதியில் ரூ.30 லட்சம் மதிப்பில் வளர்ச்சிப்பணிகள் சி.மகேந்திரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் ஒன்றியம் வேடப்பட்டி ஊராட்சி சோழமாதேவி மேடு பகுதி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மடத்துக்குளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளருமான சி.மகேந்திரன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.7 லட்சம் மதிப்பில் பயணிகள் நிழற்குடை அமைப்பதற்காக பணியை பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.

இதேபோல துங்காவி ஊராட்சி கிராம பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பில் நியாயவிலைக்கடை அமைப்பதற்கான பணிகளையும், துங்காவி ஊராட்சி,

சீலநாயக்கன்பட்டி கிராம ஆதிதிராவிடர் காலனி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.6 லட்சம் மதிப்பில் பொது சுகாதார வளாகம் அமைப்பதற்கான பணி என மொத்தம் ரூ.30 லட்சம் மதிப்பிலான பணிகளை திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் சி.மகேந்திரன் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் மடத்துக்குளம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் எஸ்.பி.சிவலிங்கம், வடக்கு ஒன்றிய கழக செயலாளர் எம்.எஸ்.காளீஸ்வரன், துரை சண்முகம், பேரூராட்சி செயலாளர்கள் என்.டி.பி.செல்வராஜ்,

சரவணன், வேடபட்டி ஊராட்சி மன்ற தலைவர் துக்கைவேல், துங்காவி ஊராட்சி மன்ற தலைவர் உமாதேவி, சோழமாதேவி ஊராட்சி மன்ற தலைவர் பாபு (எ) சாகுல் அமீது, ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் சுரேஷ்குமார், முன்னாள் ஊராட்சி கழக செயலாளர் கடத்தூர் ராசு, ஒன்றிய தகவல் தொழில்நுட்பு பிரிவு செயலாளர் ஸ்ரீ தர், கெளதம், ரகுபதி, வேடபட்டி குப்புசாமி, தாந்தோணி ஈஸ்வரன், கவியரசு, முத்துசாமி, கிருஷ்ணசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.