சிறப்பு செய்திகள்

இரட்டைமலை சீனிவாசனின் தியாகத்தை போற்றுகிறேன் -எதிர்க்கட்சி தலைவர் டுவிட்டரில் பதிவு

சென்னை

இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாளில் அவரது தியாகத்தை போற்றுகிறேன் என்று எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி கூறி உள்ளார்.

சமூகநீதி போராளி இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாளை முன்னிட்டு எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:-

ஒடுக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுத்து அவர்களது முன்னேற்றத்திற்காக தனது வாழ்வின் பெரும்பங்கை அர்ப்பணித்தவர், வழக்கறிஞர், சமூக சீர்திருத்தவாதி என பன்முகத்தன்மையுடன் விளங்கிய சமூகநீதி போராளி இரட்டைமலை சீனிவாசனின் பிறந்தநாளில் அவர் தம் தியாகத்தை போற்றுகிறேன்.

இவ்வாறு எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி கூறி உள்ளார்.