தற்போதைய செய்திகள்

மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்று பொற்கால ஆட்சியை நடத்தி காட்டுவார்

கழக மகளிர் அணி இணை செயலாளர் கீர்த்திகா முனியசாமி பேச்சு

மதுரை

கழகத்தை சிறப்பாக வழி நடத்தி தி.மு.க.வின் பொய் முகத்திரையை கிழித்தெறிந்து மீண்டும் முதலமைச்சராக எடப்பாடியார் பொறுப்பேற்று அம்மாவின் பொற்கால ஆட்சியை அமர்த்தி காட்டுவார் என்று கழக மகளிர் அணி இணை செயலாளர் கீர்த்திகா முனியசாமி பேசினார்.

ராமநாதபுரம் மாவட்ட மகளிர் அணி சார்பில் பரமக்குடியில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் கழக மகளிர் அணி இணை செயலாளர் கீர்த்திகா முனியசாமி பேசியதாவது:-

இந்திய தேசத்தில் எத்தனை இயக்கங்கள் உள்ளன. அதில் குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பான இயக்கம் என்றால் ஒட்டுமொத்த நாடே சொல்லும் அ.இ.திமுக என்று. ஏனென்றால் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பெண் சமுதாயத்திற்காக ஆட்சியிலும் சரி, கட்சியிலும் சரி பல்வேறு சீர்திருத்தங்களை செய்தார். குறிப்பாக குடும்ப பெண்கள் எல்லாம் இந்த இயக்கத்தில் உறுப்பினராக இருந்து வருகின்றனர்.

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இருந்த பொழுது பெண் சமுதாயத்திற்கு பல்வேறு திட்டங்களை செய்தார். அம்மாவிற்கு பின் சிந்தாமல் சிதறாமல் அம்மா வழங்கிய திட்டங்களை தொடர்ந்து பெண் சமுதாயத்திற்கு எடப்பாடியார் வழங்கினார்.

தற்பொழுது இந்த கூட்டத்தில் வரலாற்று மிக்க தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளோம். அதில் எடப்பாடியார் தான் ஒற்றை தலைமை ஏற்க வேண்டும் என்று இங்கு இருக்கும் மகளிர்கள் எல்லாம் ஒன்று திரண்டு தீர்மானம் நிறைவேற்றினோம்.

நிச்சயம் அம்மாவின் அருள் ஆசியுடன் வருகின்ற 11-ம்தேதி நடைபெறும் பொதுக்குழுவில் எடப்பாடியார் ஒற்றை தலைமையாக பொறுப்பேற்பார். அது மட்டுமல்லாது இந்த இயக்கத்தை சிறப்பாக வழி நடத்தி தி.மு.க.வின் பொய் முகத்திரையை கிழித்தெறிந்து மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்று அம்மாவின் பொற்கால ஆட்சியை அமர்த்தி காட்டுவார்.

இவ்வாறு கழக மகளிர் அணி இணை செயலாளர் கீர்த்திகா முனியசாமி பேசினார்.