தற்போதைய செய்திகள்

திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு

மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ உள்பட கழக நிர்வாகிகள் பங்கேற்பு

செங்கல்பட்டு

செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் திருப்போரூரில் முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி கழகத்தின் ஒற்றைத்தலைமையாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டி திருப்போரூர் கந்தசுவாமி திருக்கோயிலில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக செயலாளர்கள், எம்.எல்.ஏ உள்பட கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி கழகத்திற்கு ஒற்றைத்தலைமையாக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி ஏற்க வேண்டி திருப்போரூர் கந்தசுவாமி தகோயிலில் முருகனை தரிசித்து கோயிலின் உட்பிரகாரத்தில் தங்கத்தேர் இழுத்து சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடைபெற்றது.

செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம், செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ச.இராஜேந்திரன் ஆகியோர் தலைமையிலும், கழக மகளிர் அணி இணை செயலாளரும் மதுராந்தகம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மரகதம் குமரவேல் முன்னிலையிலும் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

அப்போது செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் கூறுகையில், கழகத்தின் ஒறறைத்தலைமையாக முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி பதவி ஏற்க வேண்டுமென்று கழகத்தினர் அனைவர் மத்தியிலும் ஒருமித்த குரலாக இருந்து வருகிறது.

ஆகவே முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி ஒற்றைத்தலைமை பதவி ஏற்க வேண்டியும், பொதுக்குழு சிறப்பாக நடைபெற வேண்டியும் திருப்போரூர் முருகன் கோயிலில் தங்கதேர் இழுத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் லட்சக்கணக்கான தொண்டர்களின் கோரிக்கையை ஏற்று முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி நிச்சயமாக ஒற்றைத்தலைமை பதவி ஏற்பார்”

இவ்வாறு மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் தெரிவித்தார்.