தற்போதைய செய்திகள்

எடப்பாடியார் தலைமை ஏற்க வேண்டி மேச்சேரி ஸ்ரீபத்ரகாளியம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேகம் -கழக நிர்வாகிகள் வேண்டுதல்

சேலம்

எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடியார் கழகத்திற்கு ஒற்றை தலைமையை ஏற்க வேண்டி மேச்சேரி ஸ்ரீபத்ரகாளியம்மன் திருக்கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து கழகத்தினர் வழிபட்டனர்.

எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி கழகத்தின் ஒற்றைத்தலைமை பதவி ஏற்க வேண்டி மேச்சேரி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் எஸ்.செல்வம் ஏற்பாட்டில், மாநிலங்களவை உறுப்பினர் என்.சந்திரசேகரன் தலைமையில் சேலம் புறநகர் மாவட்டம், மேச்சேரி மேற்கு ஒன்றிய கழகம் சார்பில் ஸ்ரீபத்ரகாளியம்மன் திருக்கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து கழகத்தினர் வழிபட்டனர். பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

இந்நிகழ்வில் பேரூர் கழக செயலாளர்கள் எமரால்டு வெங்கடாஜலம், மாணிக்கம், சேலம் புறநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் சித்தன், முன்னாள் பேரூர் செயலாளர் சி.ஜெ.குமார், மேச்சேரி மேற்கு ஒன்றிய பொருளாளர் இளங்கோவன் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.