ஓ.பன்னீர்செல்வம் மகன், முதலமைச்சரை பாராட்ட வேண்டியதன் அவசியம் என்ன -முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கேள்வி

சென்னை
ஓ.பன்னீர்செல்வம் மகன், முதலமைச்சர் ஸ்டாலினை பாராட்ட வேண்டிய அவசியம் என்ன வந்தது என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையரகத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-
அதிமுக தலைமையகத்துக்கு பாதுகாப்பு கேட்டு காவல் ஆணையரகத்தில் மனு அளிக்கப்பட்டது. ஒரு நம்ப தகுந்த தகவல். சமூக விரோதிகள் தலைமை கழகத்திலே நுழைய இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையிலே இந்த மனு அளிக்கப்பட்டுள்ளது. மாநகர காவல் ஆணையர் அந்த மனுவை பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.
திமன்றத்தில் நல்ல நியாமான தீர்ப்பை நாங்கள் எதிர்பார்க்கிறோம். எம்.ஜி.ஆர் மாளிகையில் சமூக விரோதிகள் நுழைய இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் தான் இந்த மனுவை அளித்துள்ளோம்.
புரட்சித்தலைவர் மாளிகையில் எந்த விதமான சமூக விரோத ஊடுவல் இருக்கக்கூடாது. அந்த வகையில் எங்களுடைய கடமையை நாங்கள் செய்தோம். நீதிமன்றத்தில் சரியான திசையில் விவாதங்கள் முன் வைக்கப்பட்டுள்ளது.
நல்ல தீர்ப்பு எங்களுக்கு கிடைக்கும். அந்த நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. ஓ.பன்னீர்செல்வம் மகன் முதல்வரை சந்தித்து கடிதம் அளித்தது, அதன்பிறகு பேட்டி அளித்தது இவை அனைத்தும் பட்டவர்த்தனமாக தெரிந்த விஷயம்.
திமுக அரசிலிருந்து அவர் அளித்த கடிதத்தை வெளியிட்டிருந்தனர். அதில் என்ன எழுதியிருந்தது அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்படுகின்ற முதலமைச்சர் என்று.
ஒரு கட்சியை சேர்ந்தவர் கிளை கழகத்திலிருந்து திமுகவின் அடாவடி, அட்டூழியம், செய்துவரும் நிலையில் கட்சியினர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எவ்வளவு வழக்குகள் போடப்பட்டு வருகிறது. என் மீது எத்தனை வழக்கு. வேலூர் மாவட்ட கழக செயலாளர் மீது வழக்கு.
புரட்சித்தலைவரும், புரட்சித்தலைவரும் தி.மு.க.வை தீயசக்தி என்று காட்டிய வழியில் கட்சியினரின் குரல் ஒலித்துக் கொண்டிருக்கும்போது இப்படி செய்தால் எப்படி. ஓ.பன்னீர்செல்வம் கருணாநிதியின் ரசிகர். சசிகலா தி.மு.க.வுடன் ரகசிய உறவு வைத்திருக்கிறார் என்று சொன்னாரா இல்லையா.
மனசாட்சியோடு சொல்லுங்கள். ஓ.பன்னீர்செல்வத்தின் நடவடிக்கை சரியில்லை. சட்டமன்றத்தில் தி.மு.க.வுக்கும் இவருக்கும் நல்ல உறவு உள்ளது என்று தெரிவித்தாரா இல்லையா. இதனை சசிகலா மறுக்க முடியுமா. தி.மு.க.வோடு நல்ல உறவை வைத்துக்கொண்டு தி.மு.க வாழ்க என்றால் எந்த கழக தொண்டன் இதனை ஏற்றுக்கொள்வான்.
புரட்சித்தலைவர் ஊட்டியது தி.மு.க. தீய சக்தி என்ற ரத்தம்- வாழ்நாளில் அம்மா எங்களுக்கு ஊட்டியது திமுக என்ற தீய சக்தி என்ற ரத்தம். இதுதான் வாழ்நாளில் எங்களுக்கு ஓடுகிறது. எந்த நிலையிலும் இந்த நிலையிலிருந்தும் மாற மாட்டோம். அனைத்தையும் கழக தொண்டன் பார்த்து வருகிறான். யாரையும் இன்றைக்கு ஏமாற்ற முடியாது.
அம்மா முதல்வராக இருந்தபோது ஸ்டாலின் சந்தித்தது உண்மை. ஆனால் அவர் எந்த கருத்தும் தெரிவிக்காமல் சென்றார். அம்மா சாதனை திட்டங்களை செய்திருந்த போதிலும் அவர் எதுவும் குறிப்பிடாமல் சென்றார்.
ஆனால் ஓ.பன்னீர்செல்வம் மகன் ஏன் முதல்வருக்கு ஐஸ் வைக்க வேண்டும். அவரை பாராட்டும் அவசியம் என்ன வந்தது. அவர் தி.மு.கவை நோக்கி போகும் நிலையைத்தான் இது காட்டுகிறது. புரட்சித்தலைவர் எந்த நோக்கத்திற்காக கட்சியை தொடங்கினார். கணக்கு கேட்டு ஆரம்பித்தார்.
கருணாநிதியின் குடும்ப அரசியிலிருந்து தமிழகம் விடுபட வேண்டும் என்று தொண்டர்களிடம் புரட்சித்தலைவர் தெரிவித்தார். அண்ணாவுக்கு பிறகு தி.மு.க என்பது ஒரு தீயசக்தி என்று சொன்னார். அப்படிப்பட்ட உணர்வை உடலில் ஏற்றிக்கொண்டு அதற்கு மாறாக செயல்பட்டால் அது தி.மு.க.வுக்கு ஆதரவு தானே.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.