தற்போதைய செய்திகள்

உலகிலேயே ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் மக்கள் செல்வாக்கை இழந்த ஒரே கட்சி தி.மு.க.

எதிர்க்கட்சி துணை கொறடா சு.ரவி பேச்சு

ராணிப்பேட்டை

உலகிலேயே ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் மக்கள் செல்வாக்கை இழந்த ஒரே கட்சி தி.மு.க. தான் என்று எதிர்க்கட்சி துணை கொறடா சு.ரவி எம்.எல்.ஏ. கூறினார்.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகரில் உள்ளாட்சித ேதர்தல் குறித்து இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கூட்டத்துக்கு மாவட்ட கழக செயலாளரும், எதிர்க்கட்சி துணை கொறடாவுமான சு.ரவி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர்கே.அன்பரசு வரவேற்றார்.

மாவட்ட பாசறை நிர்வாகிகள் ஆர்.செல்வராஜ், ஹரிதாஸ், மருதுபாண்டி, குணசேகரன், ஒன்றிய பாசறை செயலாளர்கள் விக்னேஸ்வரன், ரமேஷ்குமார், குகன், வசந்த்குமார், ஜெயச்சந்திரன், முனுசாமி, யுவராஜ், தேவேந்திரன், பிரகாசம், விஜயேந்திரன், கவியரசன், பவன்குமார், அப்துல் அலீம், நகர பாசறை செயலாளர் நரசிம்மன், தியாகராஜன், சவுந்தர், வினோத்குமார் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். கழக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம், சட்டமன்ற எதிர்க்கட்சி துணை கொறடாவும், மாவட்ட கழக செயலாளாருமான சு.ரவி எம்.எல்.ஏ. ஆகியோர் புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில் எதிர்க்கட்சி துணை கொறடாகவும், மாவட்ட கழக செயலாளருமான சு.ரவி எம்.எல்.ஏ. பேசியதாவது:-

வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் கழகத்துக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்று தர வேண்டும். நம்முடைய மாவட்டம் அனைத்து மாவட்டங்களுக்கும் முன்னோடி மாவட்டமாக திகழ வேண்டும். உலகத்திலேயே ஆட்சிக்கு வந்ததும் 100 நாட்களில் மக்கள் செல்வாக்கு இழந்த ஒரே கட்சி தி.மு.க. தான்.

பணித்தள பொறுப்பாளர்கள் பணியில் விதவைகள், ஆதரவற்றவர்கள், ஏழை எளியவர்கள் பணிபுரிகின்றனர். ஆனால் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் அனைவரையும் வேலையிலிருந்து நீக்கிவிட்டு அவர்களது கட்சிக்காரர்களை மட்டும் பணியில் அமர்த்தியுள்ளார்கள்.

தூய்மை பணியாளர்கள் வேலைக்கு ரூ.30,000 வரை பேரம் பேசுகின்றனர். தமிழகமே இன்று சிந்திக்க தொடங்கி விட்டது. சிறந்த ஆட்சி வழங்கிய எடப்பாடி கே.பழனிசாமி என்ற நல்ல மனிதனை விட்டு விட்டோம் என மக்கள் கவலைப்படுகின்றனர். இனி தமிழகத்தில் எந்த தேர்தல் வந்தாலும் கழகம் மிகப் பெரிய வெற்றி பெறும்.

தி.மு.க.வில் இளைஞர்களுக்கு வாய்ப்பு இல்லை. உண்மையாக உழைக்கும் தொண்டர்களுக்கு உயர்வளிக்கும் ஒரே கட்சி கழகம் என்ற பேரியக்கம் தான். கழகத்தில் இளைஞர்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் கழகத்தை ஒழித்து விடலாம், அடக்கி விடலாம் என பகல் கனவு காண்கிறார். அவருடைய பகல் கனவு பலிக்காது. கடைசி தொண்டன் உள்ள வரை கழகத்தை ஆட்டவோ அசைக்கவோ முடியாது.

ராணிப்பேட்டை தொகுதியில் கழகம் சார்பாக போட்டியிட்ட எஸ்.எம்.சுகுமார் கல் குவாரியை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அமைச்சர் காந்தியின் தூண்டுதலின் பெயரில் சீல் வைத்து அவரை மிரட்டுகின்றனர். இந்த மிரட்டலுக்கு எல்லாம் கழக தொண்டர்கள் அஞ்ச மாட்டார்கள். வரும் காலங்களில் இவர்கள் பதில் சொல்ல நேரிடும்.

505 பொய்யான வாக்குறுதிகளை தேர்தல் நேரத்தில் அறிவித்து மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தவர் ஸ்டாலின். இன்று ஒரு வாக்குறுதியும் நிறைவேற்ற முடியாத கையாலாகாத அரசாக தி.மு.க. அரசு திகழ்கிறது.

ஸ்டாலின்-சசிகலா ஆகியோர் கைகோர்த்து கழகம் என்ற பேரியக்கத்தை ஒழிக்க முயற்சிக்கிறார்கள். இந்த இயக்கம் ஸ்டாலினின் தந்தை கருணாநிதியையே பார்த்த இயக்கம். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். தீயசக்தி கருணாநிதியை எதிர்த்துதான் கழகம் என்ற பேரியக்கத்தை துவக்கினார்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்த வரை 10 ஆண்டுகாலம் கருணாநிதியால் கோட்டை பக்கமே வரமுடியவில்லை. அதற்கு பிறகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தமிழகத்தின் முதலமைச்சரானார்.

11 ஆண்டு காலம் கருணாநிதியால் கோட்டை பக்கமே வர முடியவில்லை. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் தமிழகத்தில் சிறப்பான பொற்கால ஆட்சியை வழங்கினார்கள். ஆகவே ஸ்டாலின் மற்றும் சசிகலா ஆகியோரால் கழகத்தை ஒன்றும் செய்து விட முடியாது.

இவ்வாறு எதிர்க்கட்சித் துணை கொறடாவும், மாவட்ட கழக செயலாளருமான சு.ரவி எம்.எல்.ஏ. பேசினார்.