சேலம்

புத்திர கவுண்டம்பாளையத்தில் ஏரியில் ரூ.25 லட்சத்தில் குடிமராமத்து பணி துவக்கம்

சேலம்

சேலம் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புத்திரகவுண்டம்பாளையம் உள்ள ஏரியை தூர்வார முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். அந்த கோரிக்கையின் அடிப்படையில் புத்திர கவுண்டம்பாளையம் ஏரியை தூர் வாரி வாய்க்கால் புனரமைக்க ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி அதற்கான பணியை சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் ஆகியோர் பூமிபூஜை செய்து துவக்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் பெத்தநாயக்கன் பாளையம் ஒன்றியக்குழு தலைவர் சின்னதம்பி, துணைத்தலைவர் முருகேசன்
பெத்தநாயக்கன் பாளையம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் தா.மோகன், நகர கழக செயலாளர் செல்வம், தகவல் தொழில் நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் ஜெயகாந்தன், உமையாள்புரம் ஊராட்சி மன்ற தலைவர் வாசுதேவன், உடையாப்பட்டி கூட்டுறவு சங்க தலைவர் அருண்குமார், மாவட்ட கவுன்சிலர் கலைச்செல்வி, ஒன்றிய கவுன்சிலர் செல்வி சூரன், நகர தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜோதிஸ்வரன், வீடு கட்டும் கூட்டுறவு சங்க துணை தலைவர் செல்வம், புத்திர கவுண்டம்பாளையம் ஊராட்சி மன்றத்தலைவர் சிவகாமி முனிராஜ், மாவட்ட திட்ட அலுவலர் அருள்ஜோதி அரசன் பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றிய ஆணையாளர் தமிழ்ச்செல்வன், வட்டார வளர்ச்சி அலுவலர் ரங்கராஜன், பெத்தநாயக்கன் பாளையம் தாசில்தார் வெங்கடேசன் மற்றும் விவசாயிகள் பொதுமக்கள் அரசுத்துறை அலுவலர்கள்கலந்து கொண்டனர்.