தற்போதைய செய்திகள்

2021 தேர்தலிலும் கழகமே வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் – திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் வி.மூர்த்தி உறுதி

அம்பத்தூர்

வரும் 2021 சட்டமன்றத் தேர்தலிலும் தமிழக மக்களின் பேராதரவுடன் கழக ஆட்சியே தொடரும் என்று திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான மாதவரம் வி.மூர்த்தி பேசினார்

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மாதவரம் சட்டமன்ற பகுதியில் உள்ள ஊராட்சியில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம் வெள்ளானூர் ஊராட்சியில் முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் ஜி.வி.செந்தில்குமார் ஏற்பாட்டில் 500 நபர்களுக்கு அரிசி காய்கறி பருப்பு எண்ணெய் ஆகிய தொகுப்புகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளருமான மாதவரம் வி.மூர்த்தி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர் மாதவரம் வி.மூர்த்தி பேசியதாவது:-

தமிழகத்தில் அம்மா அவர்களின் வழியில் நல்லாட்சியை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்பாக வழங்கி வருகின்றனர். முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, மக்களுக்காக திட்டங்களை கொண்டு வருகிறார். மக்களின் தேவைகளை புரிந்துகொண்டு அவர்களின் அடிப்படைத்தேவைகளை நிறைவேற்றும் அரசாக இன்று அம்மா வழியில் வரும் அண்ணன் எடப்பாடி அரசு திகழ்ந்து கொண்டிருக்கிறது.

எப்போதும் இல்லாத சிறப்பான ஆட்சி இப்போது நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் திமுக ஆட்சியில் வன்முறை தான் வெறியாட்டம் போட்டது.அவர்கள் சட்டமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் மக்கள் பிரச்சினைகளை பேசவே இல்லை. எப்போதும் சத்தம் போடுவதும் குறுக்கிடுவதிலும் முன்னணியில் இருப்பார்கள். இதுவரை மக்கள் பிரச்னைகளுக்காக திமுக குரல் எழுப்பியதில்லை. ஆனால் அம்மா வழியில் நடைபெறும் ஆட்சியில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, கொரோனா நோய்த்தொற்றால் மக்கள் அவதிப்பட்டபோதும் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் பார்த்து கொண்டார்.

மருந்தே கண்டுபிடிக்கப்படாத நோய்க்கு கபசுர குடிநீர், சத்து மாத்திரைகள் தந்து குணப்படுத்தினார். அமைச்சர்கள் அதிகாரிகள் மூலம் மாநகரத்தை கண்காணித்து கொரோனா நோயை மெல்ல மெல்ல விரட்டியடித்துக் கொண்டிருக்கிறார் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அந்த வகையில் பார்த்தோமேயானால் வரும் 2021 சட்டமன்றத் தேர்தலில் உங்களின் ஆதரவுடன் கழக ஆட்சி தான் மூன்றாவது முறையாக அரியணை ஏறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இவ்வாறு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் மாதவரம் வி.மூர்த்தி பேசினார்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றியக் கழக துணைச் செயலாளர் வி.சி.காந்தி, கொள்ளுமேடு என்.வேலன் ஆலத்தூர் பிரகாஷ்,குமார்,
மஞ்சம்பாக்கம் பிரகாஷ் வடகரை சுந்தர் உட்பட வில்லிவாக்கம் ஒன்றிய கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்