எல்லா வளமும் பெற்று இறைவன் அருளுடன் நீடூழி வாழ வாழ்த்துகிறேன் -விஜயகாந்த்துக்கு, எதிர்க்கட்சி தலைவர் வாழ்த்து

சென்னை,
எல்லா வளமும் பெற்று இறைவன் அருளுடன் நீடூழி வாழ வாழ்த்துகிறேன் என்று தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்துக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
இன்று பிறந்தநாள் காணும் தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர் விஜயகாந்த்துக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். விஜயகாந்த் உடல் ஆரோக்கியத்துடன், எல்லா வளமும் பெற்று இறைவன் அருளுடன் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.
இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.